போர் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை

இஸ்ரேலுக்கு உதவக் கூடாது என்று ஈரான் எச்சரிக்கை - படம் ஊடகம்

அமெரிக்க அதிபர் சொல்வதைப்போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிரட்டலுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், சரண் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி ஒளிந்திருக்கும் இடம் தெரியும் என்றும் ஆனால், அவரைக் கொல்லும் நோக்கம் தற்போதைக்கு இல்லையென்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

கமெய்னி நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் என்றும் திரு. டிரம்ப் தெரிவித்துள்ளார்..

இதற்குப் பதில் அளித்துள்ள ஆயத்துல்லா கமெய்னி, அவ்வாறு சரணடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயப்படப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025