எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம்

கொழும்பு-இரத்தினபுரி வீதியில் எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம் அடைந்துள்ளனர்.
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மின்னான பகுதியில் இன்று காலை பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
