இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம்

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைக் கருத்திற்கொண்டு இலங்கையர்களைத் தற்போதைக்கு அங்குத் தொழிலுக்காக அனுப்புவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் தொழில் செய்துவிட்டு நாட்டுக்கு வந்து மீண்டும் திரும்பிச் செல்ல எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு – 17062025
