தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்!
சமூக ஊடகப் பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திரு. டிரம்ப், ஈரான் அணுவாயுதத்தை வைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய இராணுவம் அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில், டிரம்ப் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானிய அரச தொலைக்காட்சித் தலைமையகத்தின் மீது நேற்றிரவு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. இதையடுத்து இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் உக்கிர நிலையயை அடைந்துள்ளது.
