பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி

பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி

பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவானார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் பருத்தித்துறை பிரதேச சபை, சபா மண்டபத்தில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 9 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 உறுப்பினர்களையும் சுயேச்சைக் குழு 2 உறுப்பினர்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஓர் உறுப்பினரையும் பெற்றுக்கொண்டன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக முன்மொழியப்பட்ட கனகரத்தினம் ஶ்ரீகாந்தருபனும் ஏகமனதாகத் தெரிவாகினர்.

யாழ் நிருபர்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025