கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு

கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு

விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தின் கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

விமானிகளின் தொர்பாடல் குரல் பதிவைக்கொண்ட (Cockpit Voice Recorder – CVR) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் விபத்து நிகழ்வதற்கு முன்னார் கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் மேற்கொண்ட தொடர்பாடல் பதிவாகியிருக்கும்.

கருப்புப் பெட்டி என்கின்ற கருவியில் விமானத் தரவுப் பதிவு (Flight Data Recorder – FDR) குரல் பதிவுகொண்ட சிவிஆர் பாகங்கள் இரண்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாகங்கள் மூலம் விபத்துக்கு முன்னரான அனைத்துத் தரவுகளையும் அறிந்துகொள்ள முடியும். அவை இன்னமும் முழுமையாக ஆய்வுசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயார் இந்தியா 787-8 டிறீம்லைனர் விமானம் கடந்த வாரம்; 242 பயணிகளுடன் இலண்டன் புறப்பட்ட வேளை, மகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரேயொரு பயணி மாத்திரம் ( விஸ்வாஸ்குமார் ரமேஷ்) உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் உண்மையில் விமானத்தில் பயணித்தாரா என்பது பற்றி இன்னமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

விமானத்தில் பயணித்த 241 பேரும் – 230 பயணிகள், 10 பணியாளர்கள், இரண்டு விமானிகள் – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். நேற்றைய தினமும் இரண்டு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

(என்டிரிவி)

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025