இரத்தினபுரி மாநகர முதல்வராக இந்திரஜித் தெரிவு

இரத்தினபுரி மாநகர முதல்வராக இந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த கே .ஏ. ஆர். இந்திரஜித் கட்டுக்கம்பளை 02 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிராத நிலையில் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி இரத்தினபுரி மாநகர சபையின் முதலாவது கூட்டம் சபரகமுவ மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எல்.எம்.பி.டபளிவ்.பண்டாரவின் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது தேசிய மக்கள் சக்தி சார்பாக கே.ஏ.ஆர். இந்திரஜித் கட்டுக்கம்பளையும் அவரை எதிர்த்து பொதுஜன முன்னணியைச் சேர்ந்த என்.ஏ. ஆர்.டி.தர்ஷன சமத் குணவர்தனவும் போட்டியிட்டனர்.
இதன்போது இரகசிய வாக்களிப்புக்கு விடப்பட்ட போது இந்திரஜித் கட்டுக்கம்பளை 14 வாக்குகளையும் சமத் குணவர்தன12 வாக்குகளையும் பெற்றனர். இந்திரஜித் கட்டுக்கம்பளை 02 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றதாக ஆணையாளர் பண்டார அறிவித்தார்.
இதன் பின்னர் பிரதி மேயர் தெரிவின் போது வீ.டி.சாரங்க விதானகே 02 மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.

உறுப்பினர் சாரங்கவிற்கு 14 வாக்குகளும்அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உறுப்பினர் சுவர்ண மல்லிமாராச்சிக்கு 12 வாக்குகளும்கிடைத்தன. சர்வஜன பலயைச் சேர்ந்த நிலந்த ரோசான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் படி இரத்தினபுரி மாநகர சபையின் 15 மேயராக தெரிவு செய்யட்ட இந்திரஜித்துக்கும் பிரதி மேயர் சாரஙகவிற்கும் உறுப்பினர்கள் பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வரலாற்றில் முதற் தடவையாக எதிர் எதிர் கட்சிகளில் மேயரும் பிரதி மேயரும் தெரிவு செய்யட்டது விசேட அம்சமாகும்.
இரத்தினபுரி மாநகர சபையில் தெரிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்கள் 27 பேரில் 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
எஸ். ஆர். ரவீந்திரன்
