இந்திய – இலங்கை தலைவிகள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தல்

இந்திய – இலங்கை தலைவிகள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தல்

இந்திய – இலங்கை தலைவிகள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று ஜூன் 16 ஆம் திகதி நடைபெற்றது.

இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினருக்கான வரவேற்புபசாரம் ஒன்று 2025 ஜூன் 16 ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் இந்திய இல்லத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் அரசியல் செயற்பாடுகளில் பெண்கள் ஆற்றிய பங்கை சுட்டிக்காட்டிய உயர் ஸ்தானிகர், இவ்விடயத்தில் இரு நாடுகளும் உலகளவில் முன்னணியில் உள்ளதாகக் கூறினார்.

கடந்த தசாப்தத்தில், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின்ளது தலைமைத்துவத்தின் கீழ், பயனாளிகள் மட்டத்திலிருந்து வினைத்திறனுடன் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாக அவர்களின் பங்கை மறுவரையறை செய்து பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா ஒரு மாற்றத்தை கண்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 67.7 வீதமாக இருப்பதால், பெண்கள் சக்தி இந்தியாவின் முன்னேற்றத்தின் ஒரு முக்கிய தூணாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

விண்வெளிப் பயணங்கள் முதல் அடிமட்ட நிர்வாகம் வரை, இந்தியப் பெண்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகிய இரு தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இலங்கை பாராளுமன்றத்தின் பெண்கள் ஒன்றியத்துக்கும் இந்திய பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுவாக்க இந்தியாவும் இலங்கையும் செயல்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற பெண்கள் ஒன்றியத்தில் உள்ள 22 உறுப்பினர்களில் மூவர் 2025 மேயில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) முதல் நோக்குநிலை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு விஜயம் செய்தனர்.

தற்போதைய இலங்கை பாராளுமன்றம் அதன் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால், ஜனநாயக பெறுமானங்களை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிறுவன ரீதியான சிறந்த நடைமுறைகள் குறித்த நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் தற்போது நடைமுறையில் உள்ள பாராளுமன்ற மட்டத்திலான பரிமாற்றங்களின் பெறுமதிமிக்க பரிமாணமாக இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது.

தகவலும் படங்களும் : இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப் பிரிவு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025