அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும் பதவிகளுக்கான தலைவர்கள் தெரிவும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 17.06.2025 அன்று பிற்பகல் 2 மணியளவில் லிந்துலை நாகசேனை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவி, பகிரங்க வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் நடைபெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருமதி. ரதிதேவி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேவராஜ் சந்திரகுமார் ஆகியோர் தலைவருக்காகப் போட்டியிட்டனர்.

இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 8 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் எட்டு வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவி தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தேவராஜ் சந்திரகுமார் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பாக தெரிவான உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

இந்தச் சபைக்கு உப தலைவர் தெரிவில் தேசிய மக்கள் சக்தி சார்பாக அல்லிமுத்து பிரதீப் தினேஷன் பெயர் முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1. அக்கரப்பத்தனை பிரதேச சபை 15 உறுப்பினர்களைக் கொண்டது.
  • தேசிய மக்கள் சக்தி – 04
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 04
  • ஐக்கிய மக்கள் சக்தி – 04
  • ஜனநாயக தேசிய கூட்டமைப்பு – 01
  • ஈரோஸ் ஜனநாயக முன்னணி – 01
  • ஐக்கிய தேசிய கட்சி – 01

க. கிருஷாந்தன், ஹற்றன்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025