மத்திய மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள்

மத்திய மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மத்திய மாகாண ஹங்குரன்கெத்த கல்வி வலய தமிழ் மொழித் தின விழா போட்டிகள் வெகு சிறப்பாக தமிழ் மணம் கமழ நடந்தேறின.
கோட்டக் கல்விப்பணிப்பாளர் இராசலிங்கத்தின் வழி காட்டலில் பாடசாலை அதிபர் இராமகிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஸ்வரன், முன்னை நாள் மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் தாமோதரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வலயத்தின் 8 இடைநிலை, உயர்தரப் பாடசாலை மாணவர்களிடையே இப்போட்டிகள் நடைபெற்றன.
தியாகராஜா சிந்துஜா, செந்தில்குமார் பிரகாசினி ஆகிய உயர் தர மாணவிகளின் பாரதியாரின் உருவத்துடன அலங்கரிக்கப்பட்டிருந்த கோலம் பலரையும் இவ்விழாவில் வெகுவாகக் கவர்ந்திருந்தது.








பன்விலை ம. நவநீதன்
