நைஜீரிய துப்பாக்கிச் சூட்டில் 100பேர் உயிரிழப்பு

நைஜீரிய துப்பாக்கிச் சூட்டில் 100பேர் உயிரிழப்பு

நைஜீரிய துப்பாக்கிச் சூட்டில் 100பேர் உயிரிழப்பு 100 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் பலர் காயமடைந்து மேலும் பலர் காணாமற்போயுள்ளனர்.

நைஜீரியாவின் வடமத்திய பகுதிய கிராமம் ஒன்றில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பல குடும்பங்கள் படுக்கையறையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வெளியில் வர முடியாமல் சிக்கியிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும் காணித் தேவை உள்ளவர்களுடனான முரண்பாடு நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்தத் தகராறின் தொடர்ச்சியாகக் கடந்த மாதம் 42பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2019 முதல் இதுவரை சுமார் 500பேர் இவ்வாறு கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காணித் தகராறு அங்கு இன, மத முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

சர்வதேச ஊடகம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025