மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா மீண்டும் திரும்பியது

கோப்புப் படம்
மும்பாயிலிருந்து இலண்டன் சென்ற எயார் இந்தியா விமானம் மூன்று மணித்தியாலம் வானில் பறந்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாகப் பயணத்தைத் தொடர முடியாமல் வானில் மூன்று மணித்தியாலம் வட்டமடித்துவிட்டு மீண்டும் மும்பாய் திரும்பியதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.
வான் பரப்பில் ஏற்டுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக விமானம் திரும்பி வந்ததாகப் பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.