இஸ்ரேலுக்கு உதவினால் மோசமான விளைவுகள் ஏற்படும்!

போர் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை

இஸ்ரேலுக்கு உதவக் கூடாது என்று ஈரான் எச்சரிக்கை - படம் ஊடகம்

போர் ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் இஸ்ரேலுக்கு உதவினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோதலின்போது இஸ்ரேலுக்கு உதவ முன்வந்தால், இந்த நாடுகளின் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலில், தாம் அமெரிக்காவுக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வெற்றியளித்துள்ளதென்றும டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தமக்குத் தெரியாது என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025