வெடித்தது போர்! இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி

வெடித்தது போர்! இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி

வெடித்தது போர்! இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் மீது கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால், மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய படைத்தளபதிகள் கொல்லப்பட்டனர். அனுவாயுத நிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஈரானில் 48பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் பதில் தாக்குதலில் இஸ்ரேலில் இருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் பலம் பொருந்திய நாடுகள் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் தாக்குதலைக் கருத்திற்கொண்டு இஸ்ரேல் உலகளாவிய ரீதியில் உள்ள தனது தூதரகஙகளை மூடியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபர் மொனால்ட் டிரம்ப் எதிர்வுகூறிய சில மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர்ப்பதற்றத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், எரிபொருள் விலையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரவிக்கின்றன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025