ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – புரட்சிப் படைத் தலைவர் படுகொலை

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில் ஈரானிய புரட்சிப் படைத் தலைவர் ஹுசைன் சலாமி படுகொலை செய்யப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானை இஸ்ரேல் எந்த நேரத்திலும் இஸ்ரேல் தாக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் பின்னிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானிய புரட்சிப் படையின் தலைமையகம் சேதமதகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் ஆன்மிகத் தலைவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் ஈரானிய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.