இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலி

இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.

கோப்புப் படம்

இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.

இதில் பல்கலைக் கழக மாணவர்கள் ஐவரும் மரணமடைந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 787 ரக விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

விமானம் மிகத் தாழ்வாகப் பறந்ததால் அதன் இறக்கை பல்கலைக்கழக விடுதிக் கட்டடத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து பற்றிய நேரலை காட்சிகளைக் கொண்ட 42 காணொலிகள் வெளியாகி உள்ளன.

இந்த எயார் இந்தியா விமானம் சேவையில் ஈடுபட்டுப் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை எந்தக் கோளாறும் ஏற்பட்டதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுடன் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இலண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் 170 இற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்று குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025