தமிழ் மொழித்தினப் போட்டிகள் மீள ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கண்டி வத்தேகம கல்வி வலயம் அறிவித்துள்ளது.
பிற்போடபட்டிருந்த மத்திய மாகாண வத்தேகம கல்வி வலயத்தின் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகள் எதிர் வரும் 15.06. 2025 ஞாயிற்றுக்கிழமையன்று திட்டமிட்டபடி ஆரம்பமாகின்றன.
மடுல்கலை கலாபொக்க அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை 8.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை போட்டிகள் நடைபெறும் என்று வத்தேகம கல்வி வலயத்தின் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஐ. ஹாசிம் தெரிவித்தார்.
சீரற்ற கால நிலை காரணமாக 31.05.2025 சனிக்கிழமை அன்று அபிராமி த. ம. வி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வத்தேகம வலயத்தின் தமிழ் மொழித் தினப் போட்டிகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பிற்போடப்பட்டது.
அப்போட்டிகள் மீண்டும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மொழித்தினப் போட்டிகள் மீள ஆரம்பம் எனும் தகவலை உரியவர்கள் கவனத்திற்கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாணவர்களுக்கு அறிவித்து நடுவர்களிடம் வருகையை உறுதிசெய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
பன்விலை ம. நவநீதன்