பொதுமன்னிப்பு போர்வையில் 26கைதிகள் விடுதலை

ஜனாதிபதி பொதுமன்னிப்பு போர்வையில் 26கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டிலும் கடந்த நத்தார் தினத்திலும் இவ்வாறு 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
சில சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வாறு ஜனாதிபதி பொதுமனனிப்புக்குத் தகுதியில்லாத கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இதுபற்றி மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொசன் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட கைதியைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
