நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி ஜேர்மன் விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருப்பதால் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி நேற்றிரவு அங்குப் பயணமானார். இன்று 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் அமைந்துள்ளது.

இதனால், முக்கிய அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் பதில் பாதுகாப்பு அமைச்சராக, பிரதிப் பாதுகாப்பு பொறுப்பு வகிக்கும் அருண ஜயசேகர நியமிக்கப்ப்டுள்ளார்.

நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிற்றல் பதில் அமைச்சராக பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார பதில் அமைச்சராக, பிரதியமைச்சர் பதவி வகிக்கும் அருண் ஹேமச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025