கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு

கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகக் கிழக்கின் கவிக்கோர்வை (கவிக்கோவை) எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

கவிக்கோவை நூல் வெளியீடு

இந்நிகழ்வானது கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயரதர் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கவிஞர்களுள் சுமார் 332 கவிஞர்களின் 454 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இது கிழக்கு மாகாணத்தின் கவிதைப் பரப்பின் ஒர் ஆவணப் பதிப்பாகவும் அமைந்திருக்கின்றது.

கவிக்கோவை நூல் வெளியீடு

இந்நிகழ்ச்சியில் கிழக்கின் கவிக்கோர்வை நூலினைத் தொகுத்து வெளியிடுவதற்குப் பங்களிப்பு செய்த கவிஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கொள்கை திட்டமிடல், செயற்திறன் மீளாய்வு கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாகக் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜே. அதிசயராஜ் கலந்துகொண்டார்.

கிராமிய அரச திணைக்கள மாகாணப் பணிப்பாளர் இளங்குமுதன், சிரேஸ்ட எழுத்தார் உமா வரதராஜன், கவிஞர் சோலைக்கிளி, மொழித்துறை விரிவுரையாளர் அப்துல் ரசாக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கவிஞர்கள், கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு கவிஞர்களுக்கான அங்கீகாரமாகும்.

திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025