மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மதுரை மாநகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகெங்குமிருந்து முருக பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பம்சமாக ஒரே தடவையில் ஐந்து இலட்சம் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெய்வீக ஆனந்தத்துடன், பண்டைய சங்க நகரமான மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ள தெய்வீக ஸ்ரீ முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், மனம் ஒருமித்த நண்பர்களையும் அன்புடன் அழைப்பதாக அகண்ட தமிழ் உலக பொதுச் செயலாளர் தண்டபாணி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகளைச் செய்ய, ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவே
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் NRI, OCI மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்போர் மட்டும் தொடர்புகொள்ளுமாறு திரு. தண்டபாணி ஏழுமலை கேட்டுக்கொண்டுள்ளார்..
மேலதிக விபரங்களுக்கு இலங்கை ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜூ பாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் – 0777689258
