பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய்

பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதையடுத்துப் பிரதேசத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதை அடுத்து, (09) இன்று பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அந்த அலுவலக அதிகாரிகளால் (09) இன்று அந்தப் பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
