கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு

வத்தளையில் இன்று நீர் வெட்டு

கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வழடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

காலை 8.30 முதல் மாலை 6.30 வரையான 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை பிரதேச சபை, கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025