இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இரத்தினபுரி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இரத்தினபுரி நகர் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தின சபேஷர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித தீர்த்த யாத்திரையும், திருக்கலச வீதி ஊர்வலமும் கடந்த ஜூன் நான்காம் திகதி நடைபெற்றது.

இந்தத் தீர்த்த யாத்திரை அன்று கொழும்பு ஶ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் காலை 7:30 அளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று முதல் நாற்பத்தெட்டு நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று விழா இனிதே நிறைபெறும்.

இரத்தினபுரி அண்ணாதுரை

ஆலயம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு

இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய மகா கும்பாபிஷேகம் – அண்ணாதுரை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025