முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான அவர் சுமார் ஏழு மணித்தியாலத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்.
