சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா

பட்டத்திருவிழா கோப்புப் படம்
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா எதிர்வரும் எட்டாந்திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி வயல் வெளியில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது.
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் பட்டத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.
இந்தப் பட்டத் திருவிழாவில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என்று நடப்பாண்டு நிர்வாகப் பீடத்தினர் அறிவித்துள்ளனர்.
மதிமுரசு யாழ் நிருபர்