துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தின் விசாரணையின் தொடராக அவர் கைதுசெசய்யப்பட்டார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இந்தத் துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சரும் கைதானார்.
