நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் போராட்டம்

நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் போராட்டம்

தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு, சிறுவர் வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி உள்ளிட்டவை இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025