நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு

மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு புசல்லாவை கிளை அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் கூடியது.
இதன்போது மறைந்த வரும் கலைகளுக்கு புத்துயிரளிக்கும் வண்ணம் மலையக பாரம்பரிய கலைத் திருவிழா ஒன்றை நடத்துவது பற்றி விரிவாகப் பேசப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே எண், எழுத்தாற்றலை விருத்தி செய்யும் நோக்கில் இலக்கிய போட்டிகளை நடத்துதல் மற்றும் இளம் கலைஞர்களின் இசைத்துறை ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இசைப் போட்டி ஒன்றை நடத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் பேரவையின் தலைவரும் நாடகக் கலைஞருமான மலையக வாசுதேவன், கலைஞரும் அதிபருமான செயலாளர் மருதமுத்து நவநீதன்,பொருளாளர் கலைஞர் முப்புளி மகேஸ்வரன், உப தலைவர் சமுர்த்தி உத்தியோகத்தர் மாரிமுத்து யோகேஸ்வரன், கவிஞரான உப செயலாளர் சந்தனம் சத்தியநாதன், பெண்கள் அணிப் பொறுப்பாளர் பாடகியும் ஆசிரியையுமான திருமதி லுசியா யசோகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
