கண்டி கல்வி வலயத்தில், விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தின் உப அதிபரான திருமதி ஏ. ஆனந்தகுமாரி (ஆனந்தி) ஆசிரிய கல்வி உத்தியோகத்தராக நியமனம் பெற்றுள்ளார்.
அதிபர் சேவையில் இருந்து, முதன்மை மொழி, தமிழ் பாடத்துக்கான இலங்கை ஆசிரிய கல்வி உத்தியோகஸ்தராகத் தெரிவுசெய்யப்பட்டு, (SLTES-111) கல்வி அமைச்சில் தனது நியமனக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

