திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்

திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம் தம்பிலுவில் கிராமத்தில் நடைபெற்றது.

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக தம்பிலுவில் கிராமத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்

இவ்வீடானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 10 இலட்சம் ரூபாய் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்ப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்திற்கு 6 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன..

திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டார்.

திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் பி.சுதாகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர் ஆகியோரோடு….

தொழினுட்ப உத்தியோகத்தர்கள், கிராம நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருக்கோவில் பிராந்திய செய்தியாளர்-எஸ்.கார்த்திகேசு

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025