மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண்

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த திகில் சம்பவமொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரை அவரின் கணவரே கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி மனைவியை மோடடார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை பிளாஸ்டிக் பையில் மோட்டார் சைக்கிளுக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தனது மனைவியைக் கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கிச் சென்றுள்ளனர்.
இதன்போதே சின்னப்பூவரசங்குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையைச் செய்ததாகத் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
