பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய படம்: ஊடகம்
பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பொருளாதார சமூக, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்காக
நாட்டிற்குப் புத்தாக்கத்துடனான ஆசிரியர்களை உருவாக்குவது கல்வியாளர்களின் பொறுப்பாகும்
கல்வி உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு கூறினார்.
நாட்டிற்குத் தேவையான பொருளாதார சமூக, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்காக நாட்டிற்கு புத்தாக்கத்துடனான ஆசிரியர்களை உருவாக்குவது அவசியம்.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் 111 ஆம் தர அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.
605 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. சிங்கள மொழிமூலத்தில் 300 பேர், தமிழ் மொழிமூலத்தில் 203 பேர், ஆங்கில மொழிமூலத்தில் 102 பேர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த அதிகாரிகள் 20 தேசிய கல்வி நிறுவனங்கள், 8 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், 112 ஆசிரிய பயிற்சி மையங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பபட உள்ளார்கள்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய:
கல்வி அமைச்சின் கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் நாங்கள் நியமனம் வழங்கும்; முதல் குழு நீங்கள்தான். எனவே நீங்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்
மற்றொரு காரணம் இது 2019 இல் தொடங்கப்பட்ட ஒரு பணி என்பதை நீங்கள் அறிவீர்கள். 06 வருடங்களுக்குப் பின்னரே 2025 இல் நீங்கள் நியமனங்களைப் பெறுகின்றீர்கள்.
நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போதும் இது ஒரு பாரிய பிரச்சனையாக இருந்தது. நீங்கள் மற்றொரு வகையிலும் சிறப்பு வாய்ந்தவரகள். “ஒரு வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளைக் கொண்ட எங்கள் கருத்தில்..
பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் அவசியம். அதற்கு ஏற்ப ஒரு மறுமலர்ச்சி சகாப்தம் தொடங்கியுள்ளது. அதில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றுதான் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றம்.
பணக்கார நாடு என்பது கட்டடங்கள், சாலைகளைக் கட்டுவது மட்டுமல்ல. மக்களின் இதயங்களில் எழும் சுதந்திரத்தின் மூலம் ஒரு நாடு உண்மையிலேயே வளர்ச்சியடைந்ததா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க முடியும்.
நாம் ஒருவரையொருவர் நடத்தும் விதம் நாம் ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளும் விதம் ஒரு நாடு வளர்ச்சியடைந்ததா இல்லையா என்பதைக் கண்டறியும் அளவுகோலாகும்.
அபிவிருத்தி செய்ய நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாடு. பிறகு நாம் முன்னேறி நம் நாட்டில் அந்த மறுமலர்ச்சியைக் கொண்டுவர வேண்டுமானால் நமது கல்வி முறையில் பெரிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
கல்வி நெருக்கடி உள்ள ஒரு நாட்டை ஒருபோதும் மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. அது நாகரிகமாக இருக்க முடியாது. எனவே கல்வியில் ஏற்படும் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது
அதற்காக உங்களுக்குப் பாரிய பங்கு உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது உங்கள் பொறுப்பு.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உட்பட் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு பங்கேற்றது.

எஸ். ஆர். ரவீந்திரன்