உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல் - படம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டுப் பால் உற்பத்தித் தொழிற்துறையை வினைத்திறனுள்ளதாகவும் விளைதிறன் மிக்க வர்த்தகமாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
ஜனாதிபதி

உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம், தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபை ஆகியவற்றை வினைத்திறன், விளைதிறன் வர்த்தகங்களாக உருவாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,

செலவினங்களைக் குறைத்துத் தற்போதுள்ள வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் சந்தையை மையமாகக் கொண்ட வினைத்திறன், விளைதிறன் வாய்ந்த வர்த்தகமாக உள்நாட்டு பால்தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மில்கோ நிறுவனத்தின் உற்பத்தித் திறனில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மில்கோ அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர் எனக் குறிப்பிட்டுள்ளது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் பாலிகா பெர்னாண்டோ,

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் பீ.சி.எஸ். பெரேரா, கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு

கொள்வனவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025