அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம்

இந்தியாவுக்கு அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
யுத்த காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்குத தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.
அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு குடிவரவு, குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமம்சர் ஆத்ந்த விஜயபால கூறினார்.
இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
