இலக்கு தவறிய துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு பகொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம்

இலக்கு தவறிய துப்பாக்கிச் சூடு இன்று காலை பாணந்துறையில் நிகழ்ந்துள்ளது.

பாணந்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நபரொருவரை இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாணந்துறை பகுதியில் இயங்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025