அவுஸ்திரேலிய பிரதிப்பிரதமர் இலங்கை வருகிறார்

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வருகை

அவுஸ்திரேலிய பிரதிப்பிரதமர் இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்கின்றார்.

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரை வரவேற்பதற்காக ‘Australia House’இல் இடம்பெறவுள்ள மதிய விருந்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கிறார.

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025