ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
