எரிபொருள் சூத்திரத்தில் மாற்றம் இல்லை

பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் சூத்திரத்தில் மாற்றம் இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு ஏற்ப, திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாய் எனவும்,

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாய் எனவும்,

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 178 ரூபாய் எனவும்,

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய் எனவும்,

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாய் எனவும் ஜூன் மாத விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025