பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்தியா விஜயம்

இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
புதுடில்லியல் கடந்த 25ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்ற செயலமர்வில் அவர்கள் பங்குபற்றினர்.


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது.
புதுடில்லியிலுள்ள இந்திய பாராளுமன்ற ஆய்வுகள் கற்கை நிலையத்தில் இலங்கைப் பிரதிநிதிகளைச் சந்தித்தமை மகிழ்ச்சியளித்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மிர் பகல்ஹாம் தாக்குதலைக் கண்டித்த இலங்கைப் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி சாலி உட்பட 20 உறுப்பினர்களும் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நால்வரும் கடந்த வாரம் டில்லி சென்றுள்ளனர்.
மே 31 ஆம் திகதிவரை நடைபெறும் ஆய்வு செயலமர்வில் அவர்கள் கலந்துகொண்டு நாடு திரும்புகின்றர்.
