மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரம் முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை (Carrom Boards) கொள்வனவு செய்ததன் மூலம், 53 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது..

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேககங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கமைய இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டு தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025