கலைஞர் சர்வதேச மாநாட்டு மண்டபம்

கலைஞர் சர்வதேச மாநாட்டு மண்டபம்

கலைஞர் சர்வதேச மாநாட்டு மண்டபம் கட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு வைபவம் இன்று (29) தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத்தரம் வாய்ந்த அந்த மையம் கட்டப்படுகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடர்பில் 2023 ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில், கலைஞர் பெயரால் சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார் அறிவித்தார்.

அதற்கமைய கலைஞர் சர்வதேச மாநாட்டு மண்டபம் கட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 512,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டப்படவுள்ளது.

அந்தக் கட்டடம் முழுவதும் குளிரூட்டும் வசதி அமைக்கப்படுகிறது. மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1,638 சீருந்துகள் மற்றும் 1,700 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அதில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.