அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு

அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைப் பிரதிநிதிகள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது.
புதுடில்லியிலுள்ள இந்திய பாராளுமன்ற ஆய்வுகள் கற்கை நிலையத்தில் இலங்கைப் பிரதிநிதிகளைச் சந்தித்தமை மகிழ்ச்சியளித்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மிர் பகல்ஹாம் தாக்குதலைக் கண்டித்த இலங்கைப் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி சாலி உட்பட 20 உறுப்பினர்களும் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நால்வரும் கடந்த வாரம் டில்லி சென்றுள்ளனர்.
மே 30 ஆம் திகதிவரை நடைபெறும் ஆய்வு செயலமர்வில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
