மக்கள் சக்தியின் அமைப்பாளர் ராஜினாமா

மக்கள் சக்தியின் அமைப்பாளர் ராஜினாமா: ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையின் இயலாமை காரணமாக நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால கூறினார்.
தனது இராஜினாமாவை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று (25) காலை தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பை நடத்தினார்.
மக்கள் சக்தியின் அமைப்பாளர் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை விளக்குகையில்,
மாவட்ட அமைப்பாளராக என்னை நம்பி வாக்குகளைப் பெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் தலைமையகம் வழங்கவில்லை.
தாய்க் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் சிறிய கட்சிகளின் நோக்கங்களை மட்டுமே தலைமையகம் எப்போதும் நிறைவேற்ற முயற்சிசெய்துவருவருவதால், நாம் இந்தப் பதவிகளை வகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தலவாக்கலை லிந்துல நகர சபை கொட்டகலை, ஆகரபத்தனை ஆகிய பிரதேச சபைகளின் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது
அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். பின்னர், வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டதும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்து வேட்புமனுக்களைத் தயாரித்தோம்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேண்டுகோளின் பேரில், அந்தக் கட்சியின் பிரதிநிதிகளை வேட்பாளர்களாகப் பெயரிட்டோம்.
எங்கள் தாய்க் கட்சியின் பிரதிநிதிகளுக்கு போனஸ் இடங்களை வழங்குவோம் என்றும், எங்களுக்குக் கிடைக்கும் போனஸ் ஆசனங்கலுக்கு அவர்கலின் பெயர்களை பரிந்துரைப்போம் என்றும் அப்போது அறிவித்தோம்.
கட்சித் தலைமைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த முன்மொழிவுக்கு நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்,
வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தோல்வியடைந்தவர்களுக்கு நாங்கள் பெற்ற போனஸ் ஆசனத்தை வழங்க வேண்டும் என்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கையையும் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை அவர்கள் விரும்புவதால்தான், ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியாவிலிருந்து சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவுக்கு பெரும்பான்மை வாக்குகளை வழங்கினார்கள்
ஆனால் பொதுத் தேர்தலில், வாக்குகள் குறைவாகப்பெறப்பட்டது, மேலும் நுவரெலியாவில் எத்தனை தலைவர்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இதிலிருந்து கட்சிக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் தேவை இருந்தாலும், நுவரெலியாவில் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்பதை நாம் புரிந்துகொண்டோம்.
மற்ற கட்சிகளைப் பாதுகாப்பதற்கு முன்பும், எங்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பாதுகாப்பதற்கு முன்பும்,
நமது கட்சியான சமகி ஜன பலவேகயவுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களையும் கட்சி உறுப்பினர்களையும் பாதுகாக்குமாறு தலைவர்களை நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம்.
சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்து கட்சியுடன் இணைந்து இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.
