புதிய அதிபராக நிரந்தர நியமனம்

புதிய அதிபராக நிரந்தர நியமனம்

புதிய அதிபராக நிரந்தர நியமனம்: கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் கந்தகட்டி தேசிய பாடசாலையின் புதிய நிரந்தர அதிபராக சுமன் இராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொட்டகலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியை டிறைட்டன் தோட்ட பாடசாலையிலும் இடைநிலை கல்வியையும் உயர்தரக் கல்வியையும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

2010 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட இவர், மவுண்ட்வேர்ணன் த.வி., தலவாக்கலை த.ம.வி, யதன்சைட் த.ம.வி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு அதிபர் போட்டிப்பரீட்சையின் மூலம் இலங்கை அதிபர் சேவைக்குள் இணைந்துக்கொண்ட இவர், கந்தகட்டி த.ம.வி யின் பிரதி அதிபராகவும் பின்னர் பதில் கடமை அதிபராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் 20/05/2025 முதல் அப்பாடசாலையின் அதிபராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்விலை ம. நவநீதன்

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025