பைலட் பிரேம்நாத் கதாநாயகி காலமானார்

பைலட் பிரேம்நாத் கதாநாயகி காலமானார்

பைலட் பிரேம்நாத் கதாநாயகி காலமானார்: இலங்கையின் எடுக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப்பட கதாநாயகி மாலினி பொன்சேகா (78) காலமானார்.

மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 மே 24 அன்று அதிகாலை தனது 78 ஆவது அகவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மாலினி பொன்சேகா 1947 ஏப்ரல் 30 ஆம் திகதி பிறந்தவர். இவர் இலங்கை சிங்கள சினிமாவின் நடிகையும்,அரசியல்வாதியுமாவார்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், ஏழாவது வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவானார்.

இலங்கையில் சிங்களத் திரைப்பட உலகில் முன்னணி நடிகையான இவர் நாடகக் கலைஞரும், இயக்குநரும் ஆவார்.

“இலங்கை சினிமாவின் ராணி” என்று கருதப்படும் இவர்,1969 ஆம் ஆண்டு தேசிய மாநில நாடக விழாவில் ‘சிறந்த நடிகை விருதை’ வென்றதன் மூலம் அறியப்பட்டார்,

அதைத் தொடர்ந்து 1980 இல் ஹிங்கனா கொல்லா, 1982 இல் ஆராதனா, 1983 இல் யச இசுரு ஆகிய படங்களுக்காக சரசவியா சிறந்த நடிகை விருதுகளை வென்றார்.

கொழும்பு மாலபேயில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்.இலங்கை இந்திய தயாரிப்பான பைலட் ப்ரேம்நாத் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.

நடிகர் திலகத்துடன் மாலினி

மாலினி மறைவு செய்தி இலங்கை திரையுலகிற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலினி பொன்சேகாவின் மறைவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் .

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025