கொழும்புவில் 12 மணித்தியால நீர்வெட்டு

வத்தளையில் இன்று நீர் வெட்டு

கொழும்புவில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 25 ஆம் திகதி காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நகரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

நீர் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:

கொழும்பு 1 முதல் 15 வரை

கோட்டை

கடுவலை

பத்தரமுல்லை

கொலன்னாவை

கோட்டிகாவத்தை

முல்லேரியாவை

IDH

மஹரகம

தெஹிவளை

கல்கிஸ்ஸை

இரத்மலானை

மொரட்டுவை

எமது வட்சப் செனலில் இணையுங்கள்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.