சுமணரத்தின தேரருக்கு பொலிஸ் சுருக்கு

சுமணரத்தின தேரருக்கு பொலிஸ் சுருக்கு: மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உகன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகத் தேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொலிஸ் சுருக்கில் தேர் இப்போதே சிக்கியிருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உகன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயற்சிக்கபட்டிருக்கிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்தப் பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறிப் பொலிஸார் தேரரைக் கைதுசெய்துள்ளனர்.
