வங்கி வட்டி வீதம் குறைப்பு

வங்கி வட்டி வீதம் குறைப்பு

வங்கி வட்டி வீதம் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி அதன் நிதியியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75 சதவீதமாக மாற்றத் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு, உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்வானது உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் இந்தக் குறைப்பு இடம்பெற்றுள்ளது.

பணவீக்கத்தை ஐந்து சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடத்துவதில் ஆதரவளிக்குமென சபை அபிப்பிராயப்படுகின்றது.

Join with our whatsapp group

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025