இலங்கை ஆசிரிய கல்வியியலாளராகத் தெரிவு

இலங்கை ஆசிரிய கல்வியியலாளராகத் தெரிவு: இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும் கொழும்புவை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எஸ் வடிவேல், இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பட்டதாரியான அதிபர் வடிவேல், தனது பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் தமிழ் முதுமாணிப் பட்டப்படிப்பை இந்தியாவின் அழகப்பா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.
கல்வி முதுமாணிப் பட்டப்படிப்பை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும் கற்றார். இவர் தற்போது கொழும்பு -9 சென். ஜோன்ஸ் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றுகிறார்.
தேசிய கல்வி நிறுவகக் கல்விமாணி பட்டக் கற்கை நெறியின் இரத்தினபுரி பிராந்திய இணைப்பாளராகவும் கொழும்பு பல்கலைக் கழகம், றுஹுணு பல்கலைக் கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
